முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நடிகர் விஷாலை எதிர்த்து இயக்குநர் அமீர் போட்டி..


ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலை எதிர்த்து போட்டியிடப்போவதாக இயக்குநர் அமீர் அறிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஷால். சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஷால், திங்கட்கிழமை (4ம் தேதி) வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்திருக்கிறார். இந்நிலையில், விஷாலுக்கு தனது ஆதரவை கமலஹாசன் தெரிவிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் அமீர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

ஆர்.கே நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.