முக்கிய செய்திகள்

ரஜினிகாந்த் தொடங்கும் டிவி சேனல்…

ரஜினி தொடங்கும் டிவி சேனலுக்கு பதிவு செய்யப்பட்ட பெயர்கள், லோகோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிப்பில் உச்சம் தொட்டவர் ரஜினிகாந்த். ஸ்டைல் மன்னனாக 40 ஆண்டுகளுக்கும் மேல் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது அரசியல் பிரவேசம் குறித்து, 20 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியின் போது, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தை ஏற்படுத்தி, உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இதற்காக தனியாக மொபைல் ஆப், இணையதளம் உருவாக்கப்பட்டு விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகளுக்கு சரியான நபர்களைத் தேர்வு செய்து,

அவ்வப் போது கூட்டங்கள் நடத்தி வருகிறார். மறுபக்கம் தனது திரை வாழ்விலும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரஜினி தனக்கென டிவி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக பெயர்கள் மற்றும் லோகோ ஆகியவை வி.எம்.சுதாகரால் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, உரிமம் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினி டிவி, சூப்பர் ஸ்டார் டிவி என்ற பெயர்களும், சில லோகோக்களின் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.

இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது