முக்கிய செய்திகள்

ராஜீவ் 75வது பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை..

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி வீர்பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும், காங்கிரஸ் நிர்வாகிகளும் ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.