முக்கிய செய்திகள்

சேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..


சேலம்,தர்மபுரி பகுதிகளில்இன்று காலை இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.

சேலம் அருகே கொண்டலாம்பட்டி, காமலாபுரம், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, பண்ணப்பட்டி,மேச்சேரி, ஏற்காடு போன்ற பல பகுதிகளிலும்,தருமபுரி மாவட்டத்தில் சில பகுதிகளிலும் இன்று காலை 7:55 மணி அளவில் சில விநாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 3.3 ஆக நில அதிர்வு பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.