‘செல்ஃபி புகைப்படத்தைப் பகிர்ந்து நன்றி நெய்வேலி’ : விஜய் டிவிட்..

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகர் விஜய் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு என நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடைபெற்று வருகிறது.