இந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக் குழு உறுப்பினருமான தா.பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தா. பாண்டியனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது டி.ஆர்.பாலு எம்.பி., ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.