முக்கிய செய்திகள்

ஷகிலா முழுக்க, முழுக்க …குடும்ப பாங்கில் நடிக்கும் “நீ.. நீ… நீதான் வேணும்”..


புதுமுகங்களுடன், “செக்ஸ் பாம்” ஷகிலா முழுக்க, முழுக்க …குடும்ப பாங்கில் நடிக்கும்  படம் “நீ.. நீ… நீதான் வேணும்!”

 

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த “பேசுவது கிளியா” படத்தை தொடர்ந்து , தற்போது வெளிவர இருக்கும் “தொடரும் கனவுசுள்” படத்தையும் இயக்கியுள்ள S. கெளரி சங்கர்., அடுத்ததாக “எஸ்.எஸ்.மூவி பார்க் “என்னும் பட நிறுவனம் தயாரிக்கும் “நீ .. நீ … நீ தான் வேணும்!” படத்துக்கு கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார்.

 

சுரேஷ்குமார் – ஆகர்ஷனா ஆகிய இரு புதுமுகங்கள் நாயகன் , நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் .,கொஞ்ச காலம் முன்பு வரை ரசிகர்களை அதிரச்செய்யும் “செக்ஸ் பாமா”க திகழ்ந்த ஷகிலா குடும்ப பாங்கில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க., அவருடன் முத்துக்காளை, கிங்காங் ,ராஜராஜன் , நெல்லை சிவா , கொட்டாச்சி , திவ்யா ஸ்ரீ , தமிழச்சி , பானு உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமும் நடிக்கிறது!

 

A .R .ரைஹானா இசையில் பாடலாசிரியர்கள் நெல்லை பாரதி , சிவராஜ் , முருகன் மந்திரம் ,விருச்சிகா ஆகியோர் பாடல்கள் எழுத , வினோத்தின் ஒளிப்பதிவு , வினு பிரேமின் படத்தொகுப்பு …. உள்ளிட்ட சிறப்பு களுடன் “எஸ்.எஸ். மூவி பார்க் “S .சுரேஷின் தயாரிப்பில் , இப்படத்திற்கு தேவையான பட்ஜெட்டில் பக்காவாக தயாராகி வருகிறது “நீ.. நீ… நீதான் வேணும்!”
“மொழிதனை பிழையின்றி பேசுதலே – அம்மொழிக்கு நாம் ஆற்றும் தொண்டு.” என்பதனை கொள்கையாகக் கொண்டிருக்கும் மொழிப் பற்றுடைய நாயகனுக்கும் , “வட்டார வழக்கு மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சி” செய்யும் பத்திரிகை நிருபரான நாயகிக்கும் இடையே நடக்கும் காரசாரமான விவாத மோதல்களும், அதைத் தொடர்ந்த கசிந்துருகும் காதலும்…தான் இப்படத்தின் கதையும் , களமும்! அதனுடன், நல்ல நட்பு, நம்மை அறியாது சிரிக்க வைக்கும் நகைச்சுவை … போன்ற ஜனரஞ்சக பொழுதுபோக்கு அம்சங்களையும் கலந்து கட்டி ., நல்ல மெஸேஜுடன் கூடிய கமர்ஷியல் திரைப்படமாக சென்னை ,பாண்டி ,கடலூர் ,விருத்தாசலம்… ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு கண்டு வளர்ந்து வருகிறது “நீ.. நீ… நீதான் வேணும்!”

Shakila Act Family Character