முக்கிய செய்திகள்

நண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது

நண்பன் சாய் தர்மராஜ் பத்திரிக்கையாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிதை பாராட்டும் வகையில் சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கப்பட்டது.

விருதினை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் குடியரசு தின விழாவில் வழங்கினார்.

சாய் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் ஓரே பத்திரிக்கை குழுமத்தில் தொடர்ந்து பத்திரிக்கையாளராகவும்,புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார்.

பொதுவாக பத்திரிக்கையாளர்களின் பயணம் பல பத்திரிக்கைகளில் தொடரும்,ஆனால் சாய்-யின் பணி பாராட்டக்குரியது.

பத்திரிக்கையாளர் பணியில் அவர் தாக்கப்பட்டு தமிழகமே பரபரப்பான சம்பவங்களும் உண்டு.

காரைக்குடி பத்திரிக்கையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும்,இன்னாள் கொளரவ தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

பத்திரிக்கை தாண்டி தனக்கென மிகப் பெரிய நட்பு வட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சாய் என் கல்லுாரி தோழர். நான் தமிழ் வழிக்கல்வி படித்து கல்லுாரி வந்தபோது ஆங்கிலம் பேசுபவர் களைப்பார்த்தால் கொஞ்சம் அச்சமாகவே தோன்றும்.

சாய் மத்தியப் பள்ளியில் படித்திருந்ததால் அவரின் ஆங்கிலப் பேச்சைப் பார்த்து நெருங்கவே பயப்பட்டோம்.

ஆனால் சாய் எந்த கர்வமும் இல்லாமல் எங்களுடன் பழகி இன்று வரை உற்ற தோழனாக திகழ்கிறார்.

பத்திரிக்கை பணி தாண்டி அவரின் சமுதாயப்பணி அளப்பறியது.

எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பல பிரச்சனைகளை முன்னின்று தீர்த்து வைத்து எனது நட்பையும் தாண்டி உறவாக மாறிவிட்டார்.

சாய்க்கு சிறந்த பத்திரிக்கையாளர் விருது கொடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும்,ஆட்சியருக்கும் நன்றிகள்

சாய் மேலும் பல விருதுகள் பெற்று சிறப்படைய வாழ்த்துவோம்.

அன்புடன்

ராஜஇந்திரன்

நடப்பு.காம் இணைய இதழ்

அழகப்பா அரசு கலைக் கல்லுாரி தோழர்