முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்..


ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மனுதாக்கல் செய்தால் தமிழக அரசின் வாதங்களை கேட்டபின் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசின் கருத்துகளை கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.