முக்கிய செய்திகள்

தமிழர் நிலங்களை திரும்ப ஒப்படைக்க இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு…

இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் நிலங்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு ராணுவத்திற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது தமிழர்களின் நிலங்கள் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், தமிழர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை திருப்பி ஒப்படைக்க அந்நாட்டு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

தமிழர்களின் நிலங்களை டிசம்பர் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ராணுவத்திற்கு பிறப்பித்த உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மீண்டும் தமிழர் நிலங்கள் அவர்களுக்கே திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.