முக்கிய செய்திகள்

தமிழக மக்களை காப்பாற்ற சிலம்பரசன் வருகிறார் : டி.ராஜேந்தர்..


தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்ற முடிவில் நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக திருச்சியில் டி.ராஜேந்தர் பேட்டி கூறியுள்ளார்.

மேலும் மாற்றத்தை கொண்டு வருகிறேனோ இல்லையோ எனது முடிவில் இருக்காது தடுமாற்றம் என்று கூறிய டி.ராஜேந்தர், 3 நாளில் கட்சி ஆரம்பிக்கிறவர்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள் என்று கூறினார்.

இதற்கிடையே கடவுள் முருகன் மாதிரி அறிவுடன் பேசக்கூடியவர் தனது மகன் சிலம்பரசன் என்றும் ஜாதகம் நன்றாக உள்ளவர்கள் தமிழக அரசியலில் ஜெயிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.