முக்கிய செய்திகள்

அரசியலுக்காக அவசரமாக ஜெ., சிலை : டி.டி.வி.தினகரன்..


அரசியலுக்காக ஜெயலலிதாவுக்கு அவசரம், அவசரமாக சிலை வைத்துள்ளனர் என்றும் மத்திய அரசின் ஏஜென்டாகத்தான் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் செயல்படுகின்றனர் என்றும் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா சிலையை எப்படி சீரமைக்க போகிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பினார். மேலும் சிலை செய்யும் பணி நடக்கும்போது எத்தனை முறை பார்வையிட்டார்கள் என்றும் வெண்கலச் சிலையில் திருத்தம் செய்ய முடியாது என்பதைக் கூட அறியாதவர்கள் என்றும் தினகரன் பேட்டியளித்துள்ளார்.