“தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னைசங்கமம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

“தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னைசங்கமம் திருவிழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் ஜனவரி 13ம் தேதி தொடங்கும் சென்னை சங்கமம் – நம்ப ஊரு திருவிழாவுக்கு அனைவரும் வாருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பதிவில்,
தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னை சங்கமம். பறையாட்டம் – கரகாட்டம் – மலைவாழ் மக்களின் கலைகள், இலக்கியத் திருவிழா, உணவுத் திருவிழா என உலகமே வியந்து பார்க்கும் நம்ம ஊருதிருவிழாவுக்கு அனைவரும் வாருங்கள்! சந்திப்போம்! என குறிப்பிட்டுள்ளார்.