தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று : பாதித்தவர்கள் எண்ணிக்கை 2058 -ஆக உயர்வு: …

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2058-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1128 பேர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆகவுள்ளது.