வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் ..

தமிழகத்தில் உள்பகுதிகளின் மீதான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குமரி, நெல்லை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.