முக்கிய செய்திகள்

தமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.