முக்கிய செய்திகள்

தமிழகம், புதுவையில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு..

தமிழகம், புதுச்சேரியில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது.

கடந்த வாரம் செவ்வாய் கிழமை முதல் 6 நாட்களில் 1000-க்கும் மேற்பட்ட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கடைசி நாளான இன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என கூறப்படுகிறது.

வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெறவதற்கான கடைசி நாள் 29-ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.