தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் : நாளை .வாக்குப்பதிவு..

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

மொத்தம் 119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கும் 200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேர வைக்கும் நாளை வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது.

தெலங்கானாவில் மாவோ யிஸ்ட் ஆதிக்கம் கொண்ட 13 தொகுதிகள் பதற்றமான தொகுதி களாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்ற 106 தொகுதி களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தேர்தல் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரஜத்குமார் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தெலங்கானா வில் கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

இதில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் மாலை 4 மணிக்கும் மற்ற பகுதிகளில் மாலை 5 மணிக்கும் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது.

இம்மாநிலத்தில் 2.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர் களில் 12 லட்சம் பேர் புது வாக் காளர்கள் ஆவர்.

இங்கு 1821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 32,815 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 55,329 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீஸாரும், 279 கம்பெனி ராணுவ வீரர்களும் ஈடுபட உள்ள னர்.

மேலும் வெளிமாநில போலீ ஸார் 18,860 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் 1.60 லட்சம் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியும் பாஜகவும் தனித்துப் போட்டி யிடுகின்றன.

காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடு கிறது. காங்கிரஸ் கூட்டணியில் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், ஜனசமிதி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர பகுஜன் சமாஜுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் உள்ளது.

ராஜஸ்தானிலும் நேற்று மாலை பிரச்சாரம் ஓய்வடைந்தது.