முக்கிய செய்திகள்

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்

நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் செங்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கோட்டையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய ஊர்வலமாக எடுத்து சென்றபோது

இரு தரப்பினருக்குமிடையே பிரச்சனை உருவானதாகவும், இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இன்று முதல் நாளை காலை 6 மணி வரை தென்காசி மற்றும் செங்கோட்டை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.