முக்கிய செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர்: ஜன-2 விருப்பமனு தாக்கல் செய்யலாம்: திமுக அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் ஜனவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜனவரி 28ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், அதற்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து வரும் ஜனவரி 2 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணி முதல், 3 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேட்பாளர் நேர்காணல், ஜனவரி 4 ம் தேதி மாலை 5 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25,000.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.