திருப்பதியில் லட்டு விலையை இருமடங்காக உயர்த்த தேவஸ்தானம் முடிவு…


தனியார் நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு, வடை உள்ளிட்டவற்றின் விலையை இருமடங்காக உயர்த்தி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக நாள்தோறும், சுமார் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு 10 ரூபாய் விலையில் 2 லட்டுக்களும், 25 ரூபாய் விலையில் 2 லட்டுக்களும் வழங்கப்படுகின்றன.

சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று வரும் பக்தர்களுக்கு தலா 2 லட்டுக்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மூலப் பொருட்களின் விலை உயர்வால், 200 கோடி வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலையை இருமடங்காக உயர்த்தி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தேவஸ்தானம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் உயர்த்தப்பட்ட விலையில் வழங்கப்படும் என்றும், ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பழையே விலையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.