முக்கிய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு..


கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in இணையத்தில் பார்க்கலாம்

தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் குரூப் 4 தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இதுவரையில் இல்லாத வகையில் இத்தோ்வை 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 போ் விண்ணப்பித்தனர். இதற்காக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 962 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.

இத்தோ்வில் தோ்வா்களின் பெயா், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் மற்றும் தோ்வுக்கூடத்தின் பெயா் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள புதிய வினாத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம் தவறான பதிவெண்ணை குறிப்பிடும் தோ்வா்களுக்கு விதிக்கப்பட்டு வந்த மதிப்பெண் குறைப்பு நடவடிக்கை விடுவிக்கப்படுவதுடன், தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கான கால அவகாசம் கணிசமாகக் குறையும் என்று தொிவிக்கப்பட்டது.

தேர்வுகள் வெற்றிகரமாக முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குரூப் 1 தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது..