முக்கிய செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சவார்த்தை நடத்த வேண்டும் : அரசுக்கு கமல் வேண்டுகோள்..

 


போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தமிழக முழுவதும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து, ட்விட்டரில், ’தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.  பொங்கலுக்கு அதுவே அரசுதரும்  விலைமதிப்பிலா பரிசாகும்’ என தெரிவித்துள்ளார்.