முக்கிய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை


திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் அடிக்கடி பிடிபடுவதால் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இருந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகளிடம் 20க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.