முக்கிய செய்திகள்

பாஜகவுடன் கூட்டணிக்கு அஸ்திவாரமிட்ட விஜயகாந்த்…


தேமுதிக சார்பில் தென்பெண்ணை ஆற்றில் பாலம் கட்ட அனுதியவாங்கி கொடுத்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய விஜயகாந்த் பாலம் அமைக்க உதவிய பிரதமர் மோடி,மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, மற்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு  நன்றி தெரிவித்தார்.மேலும் அவர் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசைக் கண்டிக்காமல் தமிழக அரசை மட்டும் குற்றம் சாட்டி பேசினார்.

பாஜக தமிழகத்தில் வலுவாக காலுான்ற விஜயகாந்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது,2014 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுக்கு எதிராக விஜயகாந்த் அடக்கி வாசிப்பது கூட்டணிக்கான அஸ்திவாரம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.