முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா : அதிமுக எம்.எல்.ஏ அதிரடி. ..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கலசப்பாக்கம் அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் தொலைக் காட்சிக்கு தொலைபேசிவாயிலாக பேட்டியளித்த அவர், நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு விவசாயிகளின் கஷ்டம் புரியும். நாளை இரவு 12 மணி வரை பொறுத்திருந்து பார்ப்பேன். நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை எனில் நாளை மறுநாள் காலை முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குவேன் என்று தெரிவித்தார்.