திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக கருத்துகள், யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் தெரிவிக்கலாம் : மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக கருத்துகள், யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் தெரிவிக்கலாம் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதற்காக மின்னஞ்சல் முகவரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டை முன்னேற்றுவதில் பங்கேற்க வாய்ப்பு என்றும், புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும்

திமுக தேர்தல் அறிக்கையில் பகிர்ந்துகொள்ள வாருங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.