கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது?: இன்று தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு

 

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று (27.3.18) அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் சித்தராமய்யாவின் தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்த மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வடக்கிலும், வடகிழக்கிலும் பெருவாரியான மாநிலங்களைக் கைப்பற்றிவிட்ட பாஜகவுக்கு தென் மாநிலங்கல் பெரும் சவாலாக இருக்கின்றன. கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக வெறியோடு செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில், சித்தராமையாவின் காங்கிரஸ் அரசோ, புதுப்புதுத் திட்டங்களை அறிவித்தும், வியூகங்களை வகுத்தும் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுகல்காந்தி கர்நாடகாவில் அவ்வப்போது வந்து தீவிரப் பரப்புரை மேற்கொள்கிறார். பாஜக சார்பில் மோடியும், அமித் ஷாவும் மாறி, மாறி வந்து மக்களைச் சந்திக்கிறார்கள். இத்தகைய பரபரப்பான சூழலில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

EC to Announce Karnataka Election Schedules today