வெள்ளத்தில் பலரின் உயிரைக் காத்த மீனவரை நெகிழும்படி செய்த முதல்வர்..


திறமையாக செயல்பட்ட மீனவரைத் தொடர்பு கொண்டு, முதல்வர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.

கேரள மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வரலாறு காணாத பேரழிவு நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க முப்படை வீரர்களுடன், மீனவர்களும் கைகோர்த்தனர். அவர்களில் ஒருவர் ரத்னக் குமார். இவர் பத்தனம்திட்டா மாவட்டம் பண்டநாட் பகுதியில் வெள்ளத்தில் தத்தளித்த பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட காயம் காரணமாக, கொச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மீனவர் ரத்னக் குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது உடன்ல்நலம் குறித்து விசாரித்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக மீட்பு பணிகளில் உதவிய மீனவர்களுக்கு ரூ.3000 அரசு சார்பில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.