முக்கிய செய்திகள்

சிலைக்கடத்தல் வழக்கு: சிபிஐக்கு மாற்றம் செய்த அரசாணைக்கு இடைக்காலத் தடை

சிலைக்கடத்தில் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இந்த வழக்கில், காஞ்சிபுரம், பழனி உட்பட பல்வேறு பெரிய கோவில்களின் சிலைத் திருட்டுகள் பற்றி பொன்.மாணிக்கவேல் குழு தீவிரமாக விசாரித்து பலரைக் கைது செய்தும் வந்தது. இந்நிலையில் திடீரென பொன்.மாணிக்கவேல் விசாரணையில் திருப்தி இல்லை எனத் தெரிவித்து, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அராசணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாளில் சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு நிமிடம் கூட தமிழக அரசின் அரசாணை நீடிக்கக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

HC Stay to Tamilnadu Govt’s GO On Statue Smugling Case