பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை

சிவகங்கை மாவட்டத்தில் ஆர்எஸ்பதி செடிகள் நடும் பணிக்கு தற்காலிகமாக தடைவிதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தச் செடிகள் நடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் வனத்துறையினர் ஆர்எஸ்பதி எனப்படும் யூகலிப்டஸ் செடிகளை பயிரிட்டு வளர்ப்பதால், நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டு விட்டது, ஆர்எஸ்பதி செடியின் வேர்கள், பூமிக்கு அடியில் நீண்ட தூரம் சென்று நீரை உறிஞ்சும் தன்மை உடையவை. பல ஆண்டுகளாக சிறு வனங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு, அங்கெல்லாம் ஆர்எஸ்பதி செடிகள் நட்டு வளர்க்கப்பட்டன. இதனால், நஞ்சையும், புன்செயும் வறண்டு, விவசாயமே அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை உணர்ந்து பொதுமக்கள், வனத்துறையினர் ஆர்எஸ்பதி செடிகளை தங்கள் மாவட்டத்தில் நடுவதை நிறுத்த வேண்டும் என குரல் எழுப்பி, பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இதனைப் பரிசீலித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆர்எஸ்பதி செடிகள் நடும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார். இதனை வரவேற்ற பொதுமக்கள், ஆர்எஸ்பதி செடிகளை அறவே அழித்தொழிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடி முழக்கமிட்டனர்.

https://www.facebook.com/100008182514913/videos/2353505928265468/