காரைக்குடியில் பாதி விலைக்கு தங்க கட்டிகள் வாங்கி தருவாதாக ரூ.3 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது..

காரைக்குடியில் பாதி விலைக்கு தங்க கட்டிகள் வாங்கி தருவாதாக ரூ.3 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்க கட்டி வாங்கி தருவதாக ரூபாய் மூன்று கோடி மோசடி செய்த கும்பலை கோவையில் கைது செய்தனர் காரைக்குடி தனிப்படை காவல்துறை.

காரைக்குடியில் தங்க கட்டி வாங்கி விற்கும் தொழில் செய்வதாக கூறி சுமார் 25 நபர்களிடம் 500 சவரன் நகை மற்றும் 3 கோடி பணம் மோசடி செய்த மாணிக்கம் அவரது மனைவி கயல்விழி இருவர் மீதும் காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பாதிக்கப் பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட மாணிக்கம் கயல்விழி தம்பதியினர் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 7 மாதங்களாக தேடப்பட்டு வந்த இந்த மோசடி கும்பலை இன்று (18.12.2020) அதிகாலை காரைக்குடி டி.எஸ்.பி அருண்குமார், தனது அதிரடிப் படையினருடன் சென்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூர், சிங்காநல்லூரில் பதுங்கியிருந்த மாணிக்கம் மற்றும் அவரது மனைவி கயல்விழி இருவரையும் கைது செய்துள்ளனர்.
அவர்களை காரைக்குடி டி.எஸ்.பி அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து வருகின்றனர்.
இந்த கும்பல் சிங்கப்பூரிலிருந்து தங்க கட்டிகளை பாதி விலைக்கு தருவதாக இல்லத்துப் பெண்களிடன் ஏமாற்றி பணம் பெற்றுள்னர். இவர்கள் பணம் இல்லாதவர்களிடம் அவர்களின் நகையை குறிப்பிட்ட நபரிடம் அடகு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்ட ஏமாற்றியுள்ளனர் அப்படி அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளே சுமார் 500 பவன் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி & படங்கள்
சிங்தேவ்