காரைக்குடி அருகே ஆக்கிரமைப்பை அகற்ற கோரி கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கள்ளமணக்குடி கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்மாய் உள்பகுதி, நீர்வரத்து கால்வாய் மற்றும் அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளித்தனர்.
காரைக்குடி வட்டம் , ஆம்பக்குடி குரூப்பைச் சேர்ந்த பெரியகோழிக்கரைப்பட்டி கண்மாய் உள்பகுதி, நீர்வரத்து கல்வாய் மற்றும் அரசு புறம்போக்கு நிலமான சுமார் 2 ஏக்கர் இடம் கள்ளமணக்குடி கிராமத்தில் உள்ள 2 தனிநபர்கள் அதாவது குமாரசாமி மற்றும் அவரது மகன் வீரசேகர் ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் கண்மாய்க்கு வரும் நீர் முற்றிலும் தடைபட்டுவிட்டது. அக்கிரமிப்புகளை மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் மனு அளித்தனர்
மேலும் இது குறித்து வட்டாசியரிடம் முறையிட்டு புகார் அளித்துள்ளோம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆக்கிரமிப்பு நபர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் சாலையை சேதப்படுத்தி சுற்றுசுவர் ட்டி ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எடுத்துள்ளனர். இது குறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்