முக்கிய செய்திகள்

குட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி : ஸ்டாலின் குற்றச்சாட்டு


குட்கா ஊழலில் சிக்கியுள்ள அமைச்சரை காப்பாற்ற டி.ஜி.பி முயற்சி செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். குட்கா ஊழலில் இருந்து தமிழக டி.ஜி.பி தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் சட்டவிரோதமாக குட்கா தயாரிக்கும் ஆலையை திமுகவினர் கண்டுபிடித்தனர். முறைக்கேட்டை கண்டுபிடித்த திமுகவினர் மீதே வழக்கு போட்டு போலீசார் கைது செய்தனர். திமுகவினர் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரணையை சீர்குலைத்து ஆதாரங்களை அழிக்க போலீசார் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.