புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்..

கரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம் பெயர்ந்து தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். கால்நடையாகவே 1000 கிலோமீட்டர் துாரம் நடந்தனர்.

பசிபட்டினியால் பலர் வாடினர்.

இந்நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய ரயில்வே சிறப்பு ரயில்களை தாமதமாக ஏற்பாடு செய்ததால் லட்சக்கணக்கான மக்கள் சாலைகளில் பசியும்,பட்டினியுமாக நடந்துனர்.

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களை உடனே அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 15 நாட்களுக்குள் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பந்தமான அனைத்து வழக்ககளையும் வாபஸ் பெற அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்..