முக்கிய செய்திகள்

இந்தோனேசியா பாலி தீவில் மிகப்பெரிய அளவில் வெடிக்க காத்திருக்கும் எரிமலை..


இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகுங் எரிமலை, மிகப்பெரிய அளவில் வெடித்துச் சிதறும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.
பாலி தீவில் உள்ள ஆகுங் எரிமலையானது, தற்போது சீறத் தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரத்துக்கு புகை மண்டலத்தை உருவாக்கி இருக்கிறது. எரிமலையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் கூட வெடிப்பின் சத்தம் கேட்பதாலும், இரவில் நெருப்பிப் பிளம்புகள் அதிகமாக தெரிவதாலும், மிகப்பெரிய அளவில் வெடித்துச் சிதறும் அபாயம் இருப்பதாக பேரழிவு தணிப்பு முகமை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
விமானங்களை இயக்குவது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதால் பாலியில் உள்ள ((denpasar)) டென்பாஸர் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் 196 சர்வதேச விமானங்கள் உள்பட 445 விமானங்களின் சேவை தடைபட்டுள்ளது. அந்த விமானங்கள் வந்து செல்வதற்காக மாற்று விமான நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.