முக்கிய செய்திகள்

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு : உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..


பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினித், எம்.எல்.ஏ சர்மா ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

வங்கியில் பெரியளவில் நடந்த முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வங்கிகளில் வாராக் கடன்களை திரும்பப் பெற புதிய வழிமுறைகளை உருவாக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.