முக்கிய செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது: சிபிசிஐடி அதிரடி..

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்னன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஊரடங்கை மீறியதாக கைதான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்துறை விசாரணையில் உயிரிழந்தனர்.

உடல்நலக்குறைவால் இருவரும் உயிரிழந்ததாக போலீசார் கூறிய நிலையில் சித்ரவதை செய்தது அம்பலமாகியுள்ளது.