முக்கிய செய்திகள்

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா


ராமநாதபுரத்தை சேர்ந்த சத்யாஸ்ரீ சர்மிளா என்ற திருநங்கை தமிழகத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞராக தேர்வாகி உள்ளார்.

ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்யஸ்ரீ என்ற திருநங்கை ஒருவர் தமிழ்நாடு மற்றும் புதுவை பார்கவுன்சலில் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

இதைப்பற்றி அவர் கூறுகையில், பின்தங்கியுள்ள சமுதாயத்தில் இருந்துவந்த தனக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் எனக்கும் மட்டுமல்லாமல் என் திருநங்கை சமுதாயத்திற்கும் கிடைத்த பெருமை. இன்னும் எங்கள் சமுதாயம் நிறைய அங்கீகாரங்களை பெறவேண்டும் என கேட்டுக்கொண்டாம்.