முக்கிய செய்திகள்

நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும்: தென் மாநில முதல்வர்களுக்கு சித்தராமையா அழைப்பு..


தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தென்மாநில முதலமைச்சர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 2011 மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு வரியை பிரித்து தர திட்டமிடப்பட்டது.

1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போது வரிப்பணம் பிரித்து தரப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை தென் மாநிலங்கள் கட்டுப்படுத்தி உள்ளனர். ஆனால் வட மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றார்.