சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர் தவிர தமிழகத்தில் 2 மாதங்களுக்கு பின் பேருந்து சேவை தொடக்கம் ..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 மாதங்களாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

அரசு ஊழியர்கள் மற்றும் கொரோனா பணியாளர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வில் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.

அதில் மண்டலம் 7 மற்றும் 8-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்ட பகுதி மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மண்டலங்களை தவிர பேருந்து இயக்கப்படடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதல் படி 60 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளிவிட்டு அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்தில் 400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள், பிற இடங்களுக்கு சென்று வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைநதுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பணிமனைகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகர வழித்தடத்தில் 126 பேருந்துகளும், மாவட்டம் மட்டும் மண்டலங்களுக்கு இடையே 206 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இதுப்போன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளில் பழைய டிக்கெட் கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது