முக்கிய செய்திகள்

டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் அலுவலகத்தில் கொள்ளை

டிடிவி தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் அலவலகத்தில் மர்மநபர்கள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் சர்மா நகரில் உள்ள முதல் தெருவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ வெற்றிவேல் அலுவலகம் உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலின் போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த அலுவலகத்து சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்டதையடுத்து கடந்த சில மாதங்களாகவே இந்த அலுவலகம் பூட்டி இருந்தது. இதை கண்ட மர்ம நபர்கள் அலுவலகத்தின் சுவர் ஏறி குதித்து அலுவலகத்திதின் கதவை உடைத்து  டிவி, கம்பூயூட்டர்,ஃபேன் உள்ளிட்ட பொருட்ளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து எம்.கே.பி நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Theft in vetrivel office