மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பில் மாற்றமில்லை : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டவட்டம்…

மேற்குதொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பரப்பளவை குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா மாநிலங்களை உள்ளடக்கி மொத்தம் 56,825 சதுர கி.மீ. பாதுகாப்பு மண்டலமாக இருக்கிறது.

இந்த நிலையில் முல்லைபெரியாற்றில் புதிய அணை கட்டுவது குறித்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில்

மேற்குதொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தை 50,000 சதுர கி.மீட்டராக குறைக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்படும் இடத்தில் வசிக்கும் உள்ளூர் மக்களை அப்புறப்படுத்த முடியாது,

விவசாயம் மற்றும், தோட்டத்தொழில்கள் அங்கு தங்கு தடையின்றி நடைபெறும். மாறாக சுரங்கத்திட்டம், குவாரி, அனல்மின் திட்டம்,

20,000 சதுர மீட்டருக்கு மேற்பட்ட கட்டுமான திட்டங்களை மட்டும் அனுமதிக்க முடியாது என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.