அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கம்..

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிமுகவின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு எதிராக செயல்பட்டதுணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் சகோதரர்ஓ.ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்துநீக்கப்பட்டுள்ளார்.

மதுரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கஒன்றியதலைவராக இன்று பொறுப்பேற்றநிலையில்,

ஓ.ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த பதவிக்கு அவர் எந்த போட்டியும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தலைமை கழகஅறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ‘‘கழகத்தின்கொள்கை – குறிக்கோள்களுக்குமுரணான வகையில்நடந்துகொண்டதாலும்,கழகக் கட்டுபாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு ஓ.ராஜாஇன்று முதல் கழகத்தின்அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்படஅனைத்துப் பொறுப்புகளில் இருந்துநீக்கி வைக்கப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.