முக்கிய செய்திகள்

ஜெ., சிகிச்சைக்கு ரூ. 6.85 கோடி செலவு : ஆறுமுகசாமி ஆணையத்தில் தகவல்..

அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு ரூ.6.85 கோடி செலவு செய்யப்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தில் தகவல் அளித்துள்ளது.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ரூ.92.7 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

பிசியோதெரப்பி சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு ரூ.1.29 கோடி வழங்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் ஜெ., சிகிச்சை பெற்ற வார்டுக்கான 75 நாள் வாடகை ரூ. 24 லட்சம், அவரை பார்த்துக்கொண்ட சசிகலா குடும்பம் தங்கிய அறை வாடகை ரூ. 1.24 கோடி,

மற்றும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உணவுக்கான செலவு மட்டும் ரூ. 1.17 கோடி என அப்பல்லோ மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.