65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன்: அத்வானி உருக்கம்

அறுபத்தைந்து ஆண்டுகால நண்பரை இழந்து தவிப்பதாக வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி

65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன். காங்கிரஸ் இல்லாத நிலையான கூட்டணி ஆட்சியை நிறுவிய பெருமைக்காக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார். அவருடன் 6 ஆண்டுகள் துணைப் பிரதமராக பணிபுரியும் பெரும் வாய்ப்பைப் பெற்றவன் நான். மூத்த தலைவர் என்ற முறையில் எனக்கு எப்போதுமே வழிகாட்டி வந்துள்ளார். 

குடியரசுத் தலைவர் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உண்மையான ராஜதந்திரியை இழந்து விட்டோம் எனவும் கூறினார். தொலைநோக்கு பார்வை, அனுபவம் ஆகியவை வாஜ்பாயின் வெற்றிக்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்தார். 

பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் மறைவு தமக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்று  மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக பணியாற்றிய வாஜ்பாய்க்கு எதிரிகளே இல்லை என்று மோடி கூறியுள்ளார். வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல் ஒவ்வொரு இந்தியருக்கும், பாஜகவினருக்கும் இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். வார்த்தைகள் இன்றி உணர்ச்சி மேலோங்கிய நிலையில் உள்ளேன் என்று  அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். பாஜகவின் கொள்கைகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரப்பியவர் வாஜ்பாய் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் இந்த தேசத்திற்காக அர்பணித்தவர் வாஜ்பாய் என்று அவர் கூறியுள்ளார்.

வெங்கய்யா நாயுடு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் வாஜ்பாய் என்று வெங்கய்யா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். 

ராகுல்காந்தி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தலைச்சிறந்த மகனை இந்தியா இழந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கோடிக்கணக்கான மக்களால் விரும்பப்பட்டவர் மற்றும் மதிக்கப்பட்டவர் ஆவார் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். 

 

ப.சிதம்பரம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள் என்பது புதிய செய்தி அல்ல என்றும் அவருக்குப்  பகைவர்களே இல்லை என்பதுதான் அவருடைய தனிச்சிறப்பு என்றும்  ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவில் ஒரு கருணை உள்ளம் கொண்ட கண்ணியமான அரசியல் தலைவரை இந்தியா இழந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.  

மு.க.ஸ்டாலின்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் நட்பு பாராட்டியவர் வாஜ்பாய் என்று அவர் கூறியுள்ளார். ஈழத்தமிழர் உரிமைக்கான டெசோ மாநாட்டில் பங்கேற்று தமிழினத்துக்கு பெருமை சேர்த்தவர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். வாஜ்பாயின் மறைவு நாட்டிற்கும் ,நாட்டின் பன்முகத்தன்மைக்கும் பேரிழப்பு என்று அவர் கூறினார். ஜனநாயகத்தின் பக்கம் நின்று தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடிய வாஜ்பாய் அவர்களின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பாகும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சுமித்ராமகாஜன்

அனைவரையும் ஒருங்கிணைத்து எதிர்க்கட்சியினரும் மதிக்கும் வண்ணம் செயல்பட்டவர் வாஜ்பாய் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் புகழாரம் சூட்டியுள்ளார். வாஜ்பாய் மறைவுக்கு சுமித்ரா மகாஜ இரங்கல் தெரிவித்தார்.

மன்மோகன்சிங்

 தனது வாழ்நாள் முழுவதையுமே தேச நலனுக்காக அர்ப்பணித்தவர் வாஜ்பாய் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத்சிங்

வாஜ்பாய் மறைவு செய்தி மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த தலைவரை தேசம் இழந்துள்ளதாக ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார். 

புதுவை முதல்வர் நாராயணசாமி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் இரங்கல் தெரிவித்துள்ளார்,. நாளை அரசு விடுமுறை, 7 நாள் துக்கம் அனுசரிப்பு என்றும் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மனோகர் பாரிக்கர்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இரங்கல் தெரிவித்தார். இந்தியா ஒரு மிகப்பெரிய தலைவரை இழந்துள்ளது; தனது முழுவாழ்க்கையை நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்தவர் வாஜ்பாய் என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் மாலை 5.05 மணிக்கு காலமானார். 

அருண்ஜெட்லி

வாஜ்பாய் இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இரங்கல் தெரிவித்தார். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு எந்நாளும் போற்றப்படும் என்றும் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

கி.வீரமணி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு கி.வீரமணி, விஜயகாந்த்,  திருநாவுக்கரசர், தமிழிசை, தினகரன், திருமாவளவன், டிடிவி தினகரன், சரத்குமார், திருச்சி சிவா, சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வாஜ்பாய் அவர்களின் இழப்பு இந்திய தேசத்திற்கு பேரிழப்பாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். சகோதரத்துவத்தை தேசத்திற்கு எடுத்துரைத்தவர் வாஜ்பாய், அவரது மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

கிரண்பேடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி இரங்கல் தெரிவித்துள்ளார். வலிமையான தலைவரையும், நல்ல மனிதரையும் நாடு இழந்துவிட்டது என்றும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வருத்ததம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு நடிகர் விவேக் இரங்கல் தெரிவித்தார். மேலும் வாஜ்பாய் மறைவுக்கு நடிகை கௌதமி,  நடிகர்இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை 5.05 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை உடல்நலக்குறைவால் காலமானார்.

ராதாஸ்

அரசியல் நாகரீகத்தை போற்றி பாதுகாத்த பிதாமகன் வாஜ்பாயின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Leaders condolence to Atal Ji