முக்கிய செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் ஜெ., படம் 12-ம் தேதி திறப்பு..


தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் 12-ம் தேதி திறக்கப்படுகிறது. ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவை தலைவர் தனபால் திறந்து வைக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலையில் விழா நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவை செயலாளர் பூபதி தெரிவித்துள்ளார்.