தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது வானிலை மையம்