தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல். தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் தற்போது புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் சென்னை நகர் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன