முக்கிய செய்திகள்

உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..


தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், “வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். உள் தமிழகத்தில் இன்றைய வெப்பநிலை அதிகபட்சம் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் ராமநாதபுரம், குமரி மாவட்ட கரையோர மக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.” என்று கூறினார்.